Vijay
தளபதி 65 படத்தின் இயக்குனர் உறுதியாகி விட்டதாகவும் அது யார் என்பது பற்றிய தகவல்களும் சமூக வளையதளங்களில் வெளியாகியுள்ளன.

Vijay 65 Director Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது, மேலும் இப்படத்தின் இயக்குனர் என இதுவரை பல பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தற்போது அது யார் என்பது உறுதியாகியுள்ளது.

இறுதி சுற்று, சூரரை போற்று ஆகிய படங்களை இயக்கியுள்ள சுதா கொங்கரா தான் விஜயை இயக்க போகிறாராம். சூர்யாவை தொடர்ந்து விஜயும் முதல் முறையாக ஒரு பெண் இயக்குனர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படமும் முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இப்படத்திற்கு ஜி. வி பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளாராம். வெகுவிரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.