Vijay 65
தளபதி 65 படத்தின் இயக்குனர் யார் என்பது பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி வருகிறது, இந்த படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தை வெற்றிமாறன், மகிழ்த் திருமேனி, முருகதாஸ், பேரரசு ஆகியோரில் ஒருவர் இயக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது தளபதி 65 படத்தை இயக்க போவது முருகதாஸும் இல்ல, பேரரசும் இல்ல பாண்டிராஜ் தான் இயக்குவார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை என குடும்ப படங்களாக கொடுத்து வரும் இவர் விஜயை வைத்தும் குடும்ப கதை ஒன்றை இயக்க இருக்கிறார் என்கின்றனர்.

தற்போது விஜயிடம் மாஸ் மட்டுமே எதிர்பார்க்கும் ரசிகர்களின் மத்தியில் குடும்ப கதை எல்லாம் செட்டாகுமா? இந்த கூட்டணி கை கூடுமா? என்பதை தான் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.