Vijay 65
வெற்றிமாறன், மகிழ்திருமேனி, பேரரசு, அட்லீ என பல பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தளபதி 65 பற்றிய இன்னொரு தகவல் கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜயை இயக்க பல இயக்குனர்கள் போட்டு போட்டு வருகின்றனர். அப்படி தான் விஜய் 65 படத்தை இயக்க மகிழ்திருமேனி, வெற்றிமாறன், அட்லீ, பேரரசு ஆகியோர் தயாராக இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் மகிழ்திருமேனி உதயநிதியை இயக்க உள்ளார். வெற்றிமாறன் சூர்யாவை இயக்குவது உறுதியாகி விட்டது. அட்லீக்கும் வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

இதனால் வேறு யார் தான் தளபதி 65 இயக்குனராக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் முருகதாஸ் விஜயிடம் ஒன் லைன் ஸ்டோரி ஒன்றை கூறி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தர்பார் படத்தை இயக்கி முடித்துள்ள அவரும் தற்போது ப்ரீயாக தான் இருக்கிறார் என்பதால் 75% தளபதி 65 படத்தை முருகதாஸ் இயக்க வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

முருகதாஸ் இயக்குகிறார் என்றால் ஒருவேளை தூப்பாக்கி 2 ஆ? இருக்குமோ என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.