விலகிய முருகதாஸ்.‌‌.தளபதி 65 இயக்குனர் யார்? - விஜய் எடுத்த அதிரடி முடிவு.!! | Thalapathy 65 | Vijay

Thalapathy 65 Director Changes Updates : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

Thalapathy 65 Director Changes Update

ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத இருந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாதி கதையை கேட்ட விஜய் அப்செட் ஆனதால் முருகதாஸ் வேண்டாம் என முடிவெடுத்து விட்டதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து தற்போது தளபதி விஜய் இரண்டு இயக்குனர்களிடம் கதை கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் இயக்குனர் பேரரசு மற்றும் மகிழ்திருமேனி எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

மகிழ்திருமேனி தற்போது உதயநிதி ஸ்டாலின் திரைப்படத்தை இயக்கி வருவதால் அடுத்த விஜய் படத்தை இயக்குனர் பேரரசு இயக்கவே அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.