Thalapathy 65 Director : Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Thalapathy 63, Mohana RAJA, Thalapathy 65 Movie, Kollywood

Thalapathy 65 Director :

விஜய்யின் 65வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தை மோகன் ராஜா இயக்குகிறாராம். இதுகுறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்துள்ளதாம்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில். கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

ரி ரிலீஸில் மெர்சல் செய்த மகத்தான சாதனை – வைரலாகும் டிவீட்!

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம் படத்தை இயக்கிவிட்டு தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை. ஆனால் அதற்குள் விஜய்யின் 65வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இப்படத்தை மோகன் ராஜா இயக்குகிறாராம். இதுகுறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்துள்ளதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.