Thalapathy 65 Budget and Vijay Salary

தளபதி 65 படத்தின் பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thalapathy 65 Budget and Vijay Salary : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

தளபதி விஜயுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தள்ளிப் போய் வரும் இப்படம் வரும் தீபாவளி அல்லது பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படங்கள்

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஒப்பந்தங்கள் கையொப்பமான நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் பட்ஜெட் ரூபாய் 130 கோடி எனவும் தளபதி விஜய்க்கு ரூபாய் 70 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது. மேலும் முருகதாசுக்கு ரூபாய் 10 கோடி சம்பளமாக அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாஸ்டர் படத்திற்காக ரூபாய் 80 கோடி சம்பளம் வாங்கிய விஜய் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இப்படத்திற்காக ரூபாய் 10 கோடியை குறைத்துக் கொண்டுள்ளார்.

அதேபோல் முருகதாஸ் 30 கோடி ரூபாய் சம்பளம் கேட்ட நிலையில் அவருக்கு 10 கோடி மட்டுமே கொடுக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.