Thalapathy 65 Announcement Update
Thalapathy 65 Announcement Update

தளபதி 65 படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

Thalapathy 65 Announcement Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். ரஜினி கமலுக்கு அடுத்ததாக உச்ச நட்சத்திரமாக இவர் மிகப்பெரிய இடத்தை அடைந்துள்ளார்.

இளைய தளபதியாக இவரை ரசித்து வந்த ரசிகர்கள் தற்போது தளபதியாக கொண்டாடி வருகின்றனர். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

தளபதி 65 சன் பிக்சர்ஸ் கூட.. தளபதி 66 இவங்க கூட தான் வெளியான அதிரடி அப்டேட்.!

இந்தப்படத்தை மாநகரம் கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு பிறகு விஜய், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் எனவும் இல்லை இல்லை இது புத்தம் புதிய ஸ்கிரிப்ட் எனவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இப்படத்திற்கானஅதிகாரப்பூர்வ அறிவிப்பு தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இரந்து தகவல்கள் கசிந்துள்ளன.

ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் படத்தில் ஹீரோவாகும் யோகிபாபு – லேட்டஸ்ட் அப்டேட்

அது மட்டுமல்லாமல் இதே தினத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் டீஸர் அல்லது டிரைலர் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த கொண்டாட்டத்திற்காக தான் விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இதுகுறித்த அறிவிப்புகளையும விரைவில் எதிர்பார்க்கலாம்.