Thalapathy 64 will be like Fesival : Thalapathy Vijay | Lokesh Kanagaraj | Vijay 64 | Anirudh | Kollywood | Tamil Cinema | Cinema News

Thalapathy 64 will be like Fesival :

தளபதி 64 படம் முழுக்க ஒவ்வொரு காட்சியில் 300-க்கும் மேற்பட்ட ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் இடம்பெறுவார்களாம். அந்தளவு இப்படத்தின் ஒவ்வொரு பிரேமும் திருவிழா கோலம் காணுமாம்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சக நடிகருடன் காதலில் சிக்கிய பிரியா பிரகாஷ் வாரியர்? வைரலாகும் செய்தி!

இந்த படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம் படத்தை இயக்கிவிட்டு தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் கேங்ஸ்டர் படம் என்றும் விஜய்க்கு ஏற்ற ஆக்‌ஷன் படம் என்றும் கூறியுள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாராம். கத்தி படத்துக்கு பின் விஜய்யுடன் அவர் இணைவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படம் முழுக்க ஒவ்வொரு காட்சியில் 300-க்கும் மேற்பட்ட ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் இடம்பெறுவார்களாம். அந்தளவு இப்படத்தின் ஒவ்வொரு பிரேமும் திருவிழா கோலம் காணுமாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.