Thalapathy 64 to Get Released on 2020 Summer : KOllywood | Tamil Cinema | . This is followed by an expectation of Vijay's next film

Thalapathy 64 to Get Released on 2020 Summer :

Thalapathy 64 to Get Released on 2020 Summer :  தளபதி 64 படம் குறுகிய கால படமாக உருவாகும் என்றும் இந்த ஆண்டிற்குள்ளாகவே படப்பிடிப்பை முடித்து அடுத்த சம்மருக்கு படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

தீரன் பாணியில் உருவாகும் த்ரிஷா படம் – வெளிவந்த சூப்பர் தகவல்!

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம் படத்தை இயக்கிவிட்டு தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் பாகுபலி பாணியில் ஒரு சூப்பர் ஹீரோ கதையைக் கொண்ட படமாம். மேலும் இப்படத்திற்கு தற்காலிகமாக இரும்புக் கை மாயாவி என பெயர் வைத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

மேலும் இப்படம் குறுகிய கால படமாக உருவாகும் என்றும் இந்த ஆண்டிற்குள்ளாகவே படப்பிடிப்பை முடித்து அடுத்த சம்மருக்கு படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.