Thalapathy 64
சம்பவம் டைட்டில் விஜய் படத்தினுடையது இல்ல, எங்களுடையது என பிரபல இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரிட்டோவின் தயாரிப்பில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு சம்பவம் என டைட்டில் வைக்கலாம் என படக்குழு முடிவு செய்திருந்ததாக தகவல்கள் பரவி வந்தன.

இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் என்பவர் சம்பவம் என்ற டைட்டிலை நாங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். அந்த டைட்டிலில் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறார் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனால் தளபதி 64 படத்திற்கு சம்பவம் டைட்டிலாக வைப்பதற்கு வாய்ப்புகள் குறைவு தான் என தகவல்கள் கிடைத்துள்ளன

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.