Thalapathy-64
விஜய் நடித்து வரும் தளபதி 64 படத்தின் டைட்டில் பற்றின தகவல் வெளியாகி உள்ளது.

தீபாவளி விருந்தாக வெளியான பிகில் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

இதில் விஜய் சேதுபதி வில்லனாக, மாளவிகா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

மேலும், இந்த படத்தில் ஆண்ட்ரியா, கவுரி, சாந்தனு, ஷாம், சௌந்தர்யா என பெரிய நடிகர் பட்டாளம் ஒப்பந்தமாகி உள்ளார்கள்.

தளபதி 64 படத்தின் BGM லீக்கா?? – கோவத்தில் தளபதி ரசிகர்கள் – உண்மை இது தான்.! .!

சமூக வலைதளத்தில் கூட தளபதி 64 படத்தின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

கல்வி துறையில் நடக்கும் ஊழலை பற்றி பேசும் படமாக தளபதி 64 படம் உருவாகி வருகிறது.

ஆனால், இன்னும் தெளிவான தகவல் வரவில்லை. இதனை தொடர்ந்து படத்தில் ஃபஸ்ர்ட் லுக் போஸ்டர் ஜனவரி 1-ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து, படத்தின் டைட்டில் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்தின் டைட்டில் வெளியிட உள்ளதாக தகவல் வந்துள்ளது.

மேலும், இது வரை தளபதி 64 படத்திற்கு 4 தலைப்புகளை யோசித்து வைத்துள்ளதாகவும் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here