Thalapathy 64 Rumors Squashed : Thalapathy Vijay | Lokesh Kanagaraj |Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Thalapathy 64 Rumors Squashed :

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்ற பெயரில் ஒரு அறிக்கை நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா,

விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

சர்ச்சை நாயகியுடன் இணையும் சிவகார்த்திகேயன் – உறுதியானத் தகவல்!

இந்த படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம் படத்தை இயக்கிவிட்டு தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் கேங்ஸ்டர் படம் என்றும் விஜய்க்கு ஏற்ற ஆக்‌ஷன் படம் என்றும் கூறியுள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாராம். கத்தி படத்துக்கு பின் விஜய்யுடன் அவர் இணைவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்ற பெயரில் ஒரு அறிக்கை நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆனால் இதை படக்குழுவினர் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விஜய் பிறந்தநாளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.