தளபதி 64 படத்தில் இடம் பெற்றுள்ள மாஸ் காட்சி குறித்த தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் டெல்லியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் மாஸான காட்சி பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அதாவது இந்த படத்தில் விஜயை கன் ( GUN ) ஷூட் ஒன்று படமாக்கப்பட்டுள்ளதாம். இது நிச்சயம் தியேட்டரில் கொண்டாடப்பட கூடிய காட்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.