Thalapathy 64 Budget
தளபதி 64 படத்தின் பட்ஜெட் என்ன என்பது தற்போது கோலிவுட் தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு பிகில் திரைப்படம் ரிலீஸாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.

விஜயின் உறவினரான பிரிட்டோ தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார், நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

மேலும் சாந்தனு, மலையாள நடிகர் ஒருவர் என பல நடிகர் நடிகைகள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது முதல் முறையாக இப்படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் இப்படம் ரூ 130 முதல் ரூ 140 கோடி வரையில் உருவாக உள்ளதாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.