Thalapathy 64 is Full of Young Team : Thalapathy Vijay | Nayanthara | Atlee | Lokesh kanagaraj | Anirudh | Thalapathy 64 Movie

Thalapathy 64 is Full of Young Team :

தொடர்ந்து முன்னணி கலைஞர்களுடன் மட்டுமே பணியாற்றி வருகிறார் என்ற விமர்சனத்துக்கு விஜய் தற்போது பதில் கூறியுள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம் படத்தை இயக்கிவிட்டு தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் கேங்ஸ்டர் படம் என்றும் விஜய்க்கு ஏற்ற ஆக்‌ஷன் படம் என்றும் கூறியுள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாராம். கத்தி படத்துக்கு பின் விஜய்யுடன் அவர் இணைவது குறிப்பிடத்தக்கது.

44 வயதில் இரண்டாவது திருமணம் செய்யும் ஆரம்பம் பட நடிகை – வைரலாகும் மாப்பிள்ளையின் புகைப்படம்.!

இவர்கள் போக இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன். எடிட்டராக பிலோமின் ராஜ் ஆகியோர் தற்போது ஒப்பந்தமாகியுள்ளனர்.

மேலும் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஸ் இதில் லைன் producer-ஆக ஒப்பந்தமாகி இருப்பதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். இதுதான் தளபதி 64 படத்தின் மொத்த தொழில் நுட்ப அணி.

இந்த அணியை பார்த்தால் ஒன்று புரியும். இது முழுக்க முழுக்க இளம் அணி. இதன்மூலம் தொடர்ந்து முன்னணி கலைஞர்களுடன் மட்டுமே பணியாற்றி வருகிறார் என்ற விமர்சனத்துக்கு விஜய் தற்போது பதில் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.