Thalapathy 64 is a gangster film | The shooting is taking place in Chennai | Thalapathy Vijay | Kollywood | Tamil CInema | lokesh kanagaraj

Thalapathy 64 is a gangster film :

தளபதி 64 படம் கேங்ஸ்டர் படம் என்றும் விஜய்க்கு ஏற்ற ஆக்‌ஷன் படம் என்றும் படக்குழு கூறியுள்ளனர்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

விஷால் படத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா அஜித் நாயகி – சூப்பர் தகவல்!

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம் படத்தை இயக்கிவிட்டு தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் பாகுபலி பாணியில் ஒரு சூப்பர் ஹீரோ கதையைக் கொண்ட படம் என்று சொல்லப்பட்டது. ஆனால் படக்குழு அதை மறுத்துள்ளனர்.

மேலும் இப்படம் கேங்ஸ்டர் படம் என்றும் விஜய்க்கு ஏற்ற ஆக்‌ஷன் படம் என்றும் கூறியுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.