தளபதி 64 படத்தில் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் பற்றிய சீக்ரெட் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஜய் 64. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தை விஜயின் மாமாவான பிரிட்டோ தயாரிக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று ( டிசம்பர் 31 ) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து தற்போது பர்ஸ்ட் லுக் எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவல் கசிந்துள்ளது.
அதாவது பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் மட்டும் தான் இடம் பெறுவார் என கூறப்படுகிறது. மேலும் செகண்ட் லுக்கில் விஜயும் விஜய் சேதுபதியும் இடம் பெறுவார்கள் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
எது எப்படியோ பர்ஸ்ட் லுக் பட்டய கிளப்பும் அது மட்டும் உறுதி.