Master
தளபதி விஜயின் Master பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது, பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒளிந்திருக்கும் சில விசயங்களை பார்க்கலாம் வாங்க.

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 64 படத்தின் டைட்டில் மாஸ்டர் என்று பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தளபதி விஜய் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்ட ஒரு நிமிடத்திற்குள்ளாகவே பல ஆயிரம் ரி-டிவீட்களும் லைக்ஸ்களும் கிடைத்தன.

இந்த போஸ்டரில் விஜய் ஒரு வளையதளத்தை சுழட்டி விட அது சுற்று வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது. படத்திலும் அப்படி தான் மக்களுக்கு துரோகம் செய்பவர்களை சுற்றி சுற்றி அதிர விட போகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

விஜயின் லுக் சிம்பிளாக இருந்தாலும் வெறித்தனமா கெத்தா இருக்கிறார், அவரின் பார்வையே படத்தை பற்றிய பல தகவல்களை கூறுகின்றன. ஆக மொத்தம் தளபதி 64 பக்கா வெறித்தனமா இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.