Thalapathy 64 director Trolled : vijay, lokesh kanagaraj, Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Indhuja, BIgil

Thalapathy 64 director Trolled :

இயக்குனர் ரத்தினகுமார் இந்த போஸ்டரை நீங்கள் இப்போது தான் பார்க்கிறீர்களா? இது உலக மகா நடிப்புடா சாமி என கிண்டல் செய்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் பிகில். கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

பிக் பாஸ் தொடங்கும் நேரத்தில் ஓவியா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!

இந்த படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம் படத்தை இயக்கிவிட்டு தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி வருகிறார்.

அண்மையில் பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து ட்வீட் செய்த இவர் அது மிகவும் சிறப்பாக இருந்ததாக பாராட்டினார்.

இதற்கு பதிலளித்த இயக்குனர் ரத்தினகுமார் இந்த போஸ்டரை நீங்கள் இப்போது தான் பார்க்கிறீர்களா? இது உலக மகா நடிப்புடா சாமி என கிண்டல் செய்துள்ளார்.

இதற்கு லோகேஷ் கனகராஜ் உங்க மேல சத்தியமா இப்பதான் பார்க்கிறேன் என ஜாலியாக பதில் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.