Thalapathi 64

Thalapathy 64 Director : தளபதி 64 படத்தை இயக்க 6 இயக்குனர்கள் கதையுடன் போட்டி போட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் டாப்ல இருக்கார், ஆனால் அஜித் சினிமாவிலே இல்லை? – பிரபல நடிகை ஓபன் டாக்.!

இந்த படத்திற்கு பெயர் கூட இன்னும் வைக்கவில்லை என்றாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. அதே சமயம் அடுத்த படத்தை யார் இயங்குவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி தளபதி 64 படத்தை இயக்க பல இயக்குனர்கள் கதையுடன் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த லிஸ்டில் ஷங்கர், முருகதாஸ், வினோத், சிவா, பேரரசு ஆகியோர் அடக்கம்.

இவர்களை தொடர்ந்து மோகன் ராஜாவும் விஜயுடன் அடுத்த படத்திற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன என கல்லூரி விழா ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதியின் யோகன் படம் ட்ராப்பாக இவரே காரணம் – வெளியான அதிர்ச்சி தகவல்.!

இவர்களில் தளபதி விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார்? தளபதி 64 படத்தின் கதைக்களம் என்னவாக இருக்கும் என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.