Thalapathy 64 Cinematographer
Thalapathy 64 Cinematographer

தளபதி 64 படத்தில் எச். வினோத் பட பிரபலத்திற்கு தளபதி விஜய் வாய்ப்பு கொடுத்து அவரை மகிழ்ச்சியாக்கியுள்ளார்.

Thalapathy 64 Cinematographer : தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்கான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

தளபதி 64-ல் விஜய்க்கு ஜோடி யார்? – வெளியான பக்கா மாஸ் தகவல்.!

அனிருத் இசையமைப்பாளராக கமிட்டாகி இருந்ததை தொடர்ந்து தற்போது ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் என்பவருக்கு விஜய் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

இவர் ஏற்கனவே யுத்தம் செய், தீரன் அதிகாரம் ஒன்று, முகமூடி ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். விஜய் படத்தில் இணைந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.