malavika

பிகில் திரைப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் பேட்டை படத்தில் நடித்த மாளவிகா மோஹனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பிகில் திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்த அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘படத்தை பார்க்கும் வரை பொறுத்திருக்க முடியாது. எப்போதும் போல் விஜய் நீங்கள் கலக்கியிருப்பீங்க’ என பதிவிட்டிருந்தார். அதோடு அதை விஜயின் டிவிட்டர் ஐடிக்கும் டேக் செய்திருந்தார்.

இதைப்பார்த்த விஜய் ரசிகர் ஒருவர் ‘மரியாதையா பேசுங்க மேடம். சார் அல்லது தளபதி சேர்த்து நீங்க டிவிட் செய்யனும்’ என டிவிட் செய்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த மாளவிகா மேனன் ‘தன்னை சார் என அழைக்க வேண்டாம் என விஜயே என்னிடம் கூறியுள்ளார். தளபதி மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு’ என பதிவிட்டுள்ளார்.

twit