Thalapathy 63

Thalapathy 63 Video : தளபதி 63 படப்பிடிப்பு தலத்தில் பெண் ரசிகைகள் குவிந்து உள்ளனர். அப்போது தளபதி விஜய் அவர்களுக்கு கையசைத்து ஹாய் சொன்ன வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முடி சூடா மன்னன். பாக்ஸ் ஆபீஸ் கிங்கான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் AGS சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் படு பிஸியாக பரபரப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று பல பெண் ரசிகர்களும் ஆண்களும் இந்த படப்பிடிப்பு தலத்தில் குவிந்துள்ளனர்.

அப்போது விஜய் அவர்களுக்கு அன்போடு சிரித்தபடி ஹாய் சொன்ன வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோவை பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.