Thalapathy 63

Thalapathy 63 Villian :

தளபதி 63 படத்தின் வில்லன் குறித்த தகவல்கள் தற்போது கசியத் தொடங்கியுள்ளன. இந்த தகவல் ரசிகர்கள் எதிர்பாராத ஒன்றாகவே அமைந்துள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 63 படத்தில் நடிக்க உள்ளார்.

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

ஆளே மாறப்போகும் தளபதி – ரசிகர்களுக்கு காத்திருக்கும் பக்கா ட்ரீட்.!

யோகி பாபு, விவேக், கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

மேலும் இந்த படத்தில் வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து மிரட்டிய அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வைரலாகி இருந்தது.

ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இப்படத்தின் வில்லனாக பிரபல மலையாள நடிகர் ஒருவர் தான் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி 63 படத்தில் இவர்களுமா? அடுத்தடுத்து வெளியான அப்டேட்.!

கேரளாவில் தளபதி விஜய்க்கு மார்க்கெட் அதிகம் என்பதாலும் மலையாள நடிகர் ஒருவரே வில்லனாக நடித்தால் அங்கு படத்திற்கு மேலும் பலத்த வரவேற்பு கிடைக்கும் என்பதால் படக்குழு இப்படியொரு ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.