Thalapathy 63 Update

Thalapathy Vijay Video : தளபதி விஜயின் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது தளபதி 63 நிறுவனம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

சிவாவுடன் இணையும் தளபதி – தயாரிப்பு நிறுவனமும் இது தான்.! #Thalapathy64

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க யோகி பாபு, விவேக், கதிர், சௌந்தர் ராஜா, பூவையார், ஆனந்த் ராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கூடிய விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது AGS நிறுவனம் தளபதி விஜய் தன்னுடைய அப்பா எஸ்.ஏ சந்திரசேகருடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் இந்த வீடியோ எப்போது? எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரங்களை எல்லாம் அந்நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.