Thalapathy 63 Updates :
Thalapathy 63 Updates :

Thalapathy 63 Updates : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை சுற்றுப்புற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்பு விஜய் – அட்லி கூட்டணி இணைந்த இரண்டு படங்களும் மெகா ஹிட்.

இருந்தாலும் அந்த படங்களில் சொன்னதை விட அட்லி அதிகமாக பட்ஜெட்டை இழுத்தார் என்ற விவகாரம் பின்னர் விஸ்வரூபம் எடுத்தது.

அதேபோல்தான் தற்போது இந்த படத்திற்கும் சொன்னதை விட கூடுதலாக பட்ஜெட் எகிறி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் அட்லி மீது தயாரிப்பு தரப்பு அதிருப்தியில் இருப்பதாகவும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

Thalapathy 63 Updates
Thalapathy 63 Updates

இந்நிலையில் இந்த விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ளதாம். சொன்னதைவிட எப்படி பட்ஜெட் எகிறியது என அட்லியை அழைத்து தயாரிப்பு தரப்பு விசாரித்தபோது தயாரிப்பு நிர்வாகிகள் பணத்தை அடித்திருப்பார்கள் என்று அட்லி சொன்னதும் தயாரிப்பாளர்கள் அவர்மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.

இப்படி இருவரும் மோதிக்கொண்டாலும் விஜய் இந்த விஷயத்தில் தற்போதுவரை மௌனம் காப்பதாக சொல்லப்படுகிறது.

இவர்களுக்குள் சமரசம் ஏற்படாவிட்டால் பின்னர் இதில் தலையிடலாம் என விஜய் தரப்பு யோசிக்கிறதாம்.

 

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.