Thalapathy 63 :
Thalapathy 63 :

Thalapathy 63 : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை சுற்றுப்புற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன்
நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

தளபதி 63 இவரா? – எதிர்பார்ப்பை எகிற வைத்த அதிகாரபூர்வ அறிவிப்பு.!

இவர்கள் போக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் படக்குழுவுடன் இதுகுறித்து விசாரித்தபோது அவர்கள் இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

தப்பான தளபதியின் கணக்கு, படக்குழு எடுத்த அதிரடி முடிவு – தளபதி 63-ன் அதிர்ச்சி அப்டேட்.

மேலும் தளபதி 63 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தாங்கள் வெளியிடும் வரை வேறு யாரும் நம்பவேண்டாம் என்றும் படக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.