Thalapathy 63

Thalapathy 63 : தளபதி 63 படத்தில் மேலும் நடிகையாக ஆத்மீகா கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள தன்னுடைய 63-வது படத்தில் நடிக்க உள்ளார்.

தனுஷை தொடர்ந்து களமிறங்கும் தளபதி – விஜய் 63 அப்டேட்.!

இந்த படத்தை ஏஜில் நிறுவனம் தயாரிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். நயன்தாரா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் கதிர், விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

வெறித்தனமா இருக்கு – எதிர்பார்ப்பை எகிற வைத்த அட்லீயின் அப்டேட்.!

இவர்களை தொடர்ந்து இப்படத்தில் பிரபல நடிகையான ஆத்மீகாவும் முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை ஆத்மீகா தமிழில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகி இருந்த மீசையை முறுக்கு படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.