Thalapathy 63 Updates
Thalapathy 63 Updates

Thalapathy 63 Updates : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அடையாரில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்று வருவதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

தளபதி 63 வியாபாரத்தில் ரஜினியை தூக்கி சாப்பிட்ட விஜய் – எத்தனை கோடி தெரியுமா?

இதில் நூற்றுக்கணக்கான ஜூனியர் நடிகர்கள் பங்கேற்று நடித்து வருவதாகவும் சொல்லி இருந்தோம்.

இந்நிலையில் படப்பிடிப்பில் குழந்தைகளுடன் இயக்குநர் அட்லி, யோகி பாபு, விவேக் ஆகியோர் எடுத்துகொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தர்பார் டீமுக்கு டார்ச்சர் தரும் மும்பை வில்லன் – என்ன செய்ய போகிறார் முருகதாஸ்?

மேலும் இந்த ஷெட்யூலில் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழில் ஆரண்ய காண்டம், மாயவன் போன்ற படங்களில் நடித்துள்ள இவர் பாலிவுட்டில் மிகப்பெரிய பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.