Thalapathy 63
Thalapathy 63

Thalapathy 63 : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

தர்பாரில் இணைந்த அஜித்தின் ஆஸ்தான பிரபலம் – யார் தெரியுமா?

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது.

என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அடையாரில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்று வருகிறதாம்.

இதில் நூற்றுக்கணக்கான ஜூனியர் நடிகர்கள் பங்கேற்று நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதில் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழில் ஆரண்ய காண்டம், மாயவன் போன்ற படங்களில் நடித்துள்ள இவர் பாலிவுட்டில் மிகப்பெரிய பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.