Thalapathy 63 
Thalapathy 63 

Thalapathy 63  : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது.

என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

மேலும் இப்படத்தில் விஜய் மகளிர் ஃபுட்பால் அணியின் கோச்சாக நடித்துவருவதாகம் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி விஜய் பயிற்சியளிக்கும் அணியினருக்கும் மனிப்பூர் மகளிர் அணியிருக்குமான போட்டியைதான் படக்குழு தற்போது படமாக்கி வருகிறார்களாம்.

தளபதி 63 படப்பிடிப்பில் இதெல்லாம்தான் நடக்கிறது – சுவாரஸ்யமான அப்டேட்கள் உள்ளே!

இது இந்த போட்டியின் முதல் சுற்று என்றும் தகவல் கசிந்துள்ளது. மேலும் விஜய்யுடன் விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோரும் இப்படத்தில் கோச்சாக விஜய்யின் உதவியாளராக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.