தளபதி-63

தளபதி-63 படத்தை பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தில் நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, ராதா ரவி மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்தை அடுத்து மீண்டும் அட்லீ இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது இந்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம், இப்படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஜனவரி மாதத்தில் தொடங்க உள்ளதாகவும் அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படமும் அரசியல் பேசும் படமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி அரசியல் பேசும் படமாக இருந்தால் இந்த படத்திற்கு ஆளப்போறான் தமிழன் என டைட்டில் வைக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தளபதி 63 குறித்து வெளியாகியுள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here