Thalapathy 63 Update
Thalapathy 63 Update

Thalapathy 63 Update – அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

தளபதி 63 படம் மீது வழக்கு போடும் இளம் இயக்குனர்? அதுக்குள்ள இன்னொரு சர்ச்சையா!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது. என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

ஆனால் இப்படம் குறித்து நாளுக்குநாள் ஏதோவொரு வதந்தி பரவிய வண்ணம் உள்ளது. ஆனால் இது எதுவும் உண்மையில்லை.

நினைத்தது போலவே இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடர்ச்சியாக எழுபது நாட்கள் நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளனர்.

தளபதி 63 படத்தில் மொத்தம் இத்தனை நாயகிகளா? அதிரவைக்கும் தகவல்!

மேலும் இதன் படப்பிடிப்பு தற்போது நான்காம் கட்டத்தை எட்டியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தீபாவளிக்கு படம் வெளியாவது உறுதியாகிவிட்டது.

அதேபோல் விஜய் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.