Thalapathy 63

Thalapathy 63 Updates :

தளபதி 63 படத்திற்காக நடிகர் விஜய் ஆளே மாற இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் தளபதி 63 வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல நடிகரான தளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து தெறி, மெர்சல் என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்திருந்த அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் இம்மாத இறுதியில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[ இதையும் படிங்க : இதுவும் காப்பியா? தளபதி 63 குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்.! ]

இந்த படத்தை AGS நிறுவனம் தயாரிக்க ரஹ்மான் இசையமைக்க உள்ளார். நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளார்.

மேலும் ஸ்போர்ட்ஸ் படமாக உருவாக உள்ள இப்படத்தில் தளபதி விஜய் கோச்சராக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த தகவல்களை தொடர்ந்து தற்போது ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது தளபதி விஜய் இந்த படத்திற்காக தன்னுடைய உடல் அமைப்பை முற்றிலுமாக மாற்றி கட்டுமஸ்தாக மாற உள்ளதாக கூறப்படுகிறது.

அப்போ தளபதி ரசிகர்களுக்கு இந்த படம் செம ட்ரீட் தான்.

[ இதையும் படிங்க : விஜய் நடிக்க இருந்த சரித்திர படத்தை கைப்பற்றிய சூர்யா – வெளியான அதிரடி தகவல்.! ]

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.