Vijay 63 Update

Vijay 63 Update : தளபதி 63 படம் பற்றிய அப்டேட்டை இயக்குனர் அட்லீ வெளியிட்டு இருப்பது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை அடுத்து AGS நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 63 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அடுத்த வருட ( 2019 ) தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரசிகர்கள் பலரும் இப்படத்தின் அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது அட்லீ இப்படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆம், இயக்குனர் அட்லீ சமீபத்தில் நடந்த சீதக்காதி படத்தின் பிரீமியர் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது செய்தியாளர்கள் தளபதி 63 படம் எப்படி வரும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த கேள்விக்கு படம் வெறித்தனமாக வருகிறது என பதிலளித்துள்ளார். இதனால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.