
Thalapathy 63 Title : தளபதி 63 படத்தின் டைட்டில் குறித்த வதந்திக்கு முற்றுபுள்ளி கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் சர்கார் படத்தை அடுத்து AGS நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
மெர்சல், தெறி என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த அட்லீ தான் இப்படத்தை இயக்க உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
படம் விளையாட்டை மையாமாக கொண்டு உருவாக உள்ளது. மேலும் படத்திற்கு ஆளப்போறான் தமிழன் என பெயர் வைக்க உள்ளதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.
ஆனால் அது தளபதி 63 படத்திற்கான டைட்டில் இல்லையாம். வேறு ஒரு படத்திற்கு அட்லீ பதிவு செய்துள்ள டைட்டிலாம்.
இந்த படத்திற்கான டைட்டிலை இன்னும் படக்குழுவினர் முடிவு செய்யவில்லை என்பது தான் உண்மை. அட்லீ பதிவு செய்துள்ள ஆளப்போறான் தமிழன் என்ற டைட்டிலில் வெளியாக உள்ள படத்திலும் விஜய் தான் நடிப்பார் என கூறப்படுகிறது.