Thalapathy 63 Special

Thalapathy 63 Special : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை சுற்றுப்புற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

விஜய் மனசு யாருக்கு வரும்? தளபதி 63 குறித்து வெளியான அதிரடி தகவல்.!

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு கூடிய விரைவில் சென்னையிலேயே துவங்கவுள்ளது. இதற்காக கலை இயக்குனர் முத்துராஜ் கைவண்ணத்தில் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்றும் தயாராகி வருகிறது.

அண்மையில் நடந்த முதற்கட்ட படப்பிடிப்பில் சென்னை காசிமேடு மீன் சந்தை பாணியில் ஒரு அரங்கத்தை உருவாக்கிய படக்குழு, அதில் அதிரடியான சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர்.

ராதா ரவி சர்ச்சை : நயன்தாரா செய்த வேலையை போட்டுடைத்த கலா மாஸ்டர்.!

கடைசியாக முடிந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் இணைந்து நடித்த நயன்தாரா, அடுத்தக்கட்ட படப்பிடிப்பிலும் இணையுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.