thalapathy 63 satellite
thalapathy 63 satellite

thalapathy 63 satellite : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அடையாரில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்று வருவதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

விரைவில் சென்னைக்கு டாட்டா காட்டும் தளபதி 63 டீம் – அடுத்த ஸ்பாட் எது தெரியுமா?

இதில் நூற்றுக்கணக்கான ஜூனியர் நடிகர்கள் பங்கேற்று நடித்து வருவதாகவும் சொல்லி இருந்தோம்.

படப்பிடிப்பில் குழந்தைகளுடன் இயக்குநர் அட்லி, யோகி பாபு, விவேக் ஆகியோர் எடுத்துகொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இது ஒருபக்கம் இருக்க இப்படத்தின் வியாபாரமும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்.

முதற்கட்டமாக இப்படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல சன் தொலைக்காட்சி ரூ. 28 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.