Santhosh Narayanan

Santhosh Narayanan : தளபதி 63 அப்டேட் பற்றி பேசி விஜய் ரசிகர்களிடம் பாடலாசிரியர் விவேக்கை கூர்ந்து விட்டுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் தளபதி விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

புருவத்தில் ஒரு கோடு, தளபதி 63-க்காக கெட்டப்பை மாற்றிய விஜய் – ட்ரெண்டாகும் புகைப்படம்.!

இந்த படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி, தீனா என பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

பாடலரிசியர் விவேக் இப்படத்திற்கு பாடல் எழுத உள்ளார். விவேக் என்றாலே ரசிகர்கள் அப்டேட் கேட்டு அவரை துளைத்தெடுத்து விடுவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

தற்போது சந்தோஷ் நாராயனும் ஒரு ட்வீட் போட்டு ரசிகர்களிடம் விவேக்கை கோர்த்து விட்டுள்ளார். அதாவது அந்த டீவீட்டில் கூறியிருப்பதாவது,

ஹாய் விவேக் சார் எப்படி இருக்கீங்க? நல்லா சாப்புடுங்க, நிறைய வாட்டர் குடிங்க வீட்டில கேட்டதாக சொல்லுங்க அப்படியே அப்பப்போ தளபதி 63 அப்டேட்டும் குடுங்க என கூறி கோர்த்து விட்டுள்ளார்.

இதனை பார்த்த விவேக்கும் ஏன் தெய்வமே? இப்படி நல்லா கோர்த்து விடுறீங்களே என்பது போல புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.