Thalapathy 63

Thalapathy 63 Photo : தளபதி 63 பற்றிய தகவல் புகைப்படத்துடன் லீக்காகி இருப்பதால் அட்லீ கடும் அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் திரைப்படத்தை அடுத்து தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பில் கேரவனில் விஜய் செய்த செயல் – அனைவரையும் அதிர்ச்சியாக்கிய உண்மை சம்பவம்.!

AGS நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது தெறி படத்தில் இடம் பெற்றிருந்தது போல் இப்படத்திலும் ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது.

அதற்காக சென்னையிலுள்ள நேப்பியர் பாலத்தை போல ஒரு செட் வடபழனியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை புகைப்படம் எடுத்த விஜய் ரசிகர்கள் இணையத்தில் கசிய விட்டுள்ளனர்.

அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தளபதி 63 படம் குறித்து புகைப்படங்கள் கசிந்து வருவது அட்லீயை அப்செட்டாக்கியுள்ளது.

Thalapathy 63 Set

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.