Thalapathy 63 Movie Updates : Vijay | Atlee | Nayanthara | Vijay 63 | Kollywood | Nayanthara | Kollywood | Tamil Cinema | Cinema

Thalapathy 63 Movie Updates :

தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு ஈ.சி.ஆரில் இருந்தே உள்ளே வந்து தற்போது சிட்டிக்குள் நடைபெற்று வருகிறதாம்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

தளபதி 63-ல் இப்படியொரு வேடத்தில் இந்துஜா? – முதல் முறையாக லீக்கான புகைப்படம்.!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தின் படப்பிடிப்பு ஈ.சி.ஆரில் இருந்தே உள்ளே வந்து தற்போது சிட்டிக்குள் நடைபெற்று வருகிறதாம்.

மேலும் சில கல்லூரிகளிலும் இப்படத்தின் மாண்டேஜ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

இப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை. அதற்குள் இப்படத்தின் வியாபாரம் படு ஜோராக நடந்தது வருகிறதாம்.

முன்னதாக இப்படத்தின் சேட்டிலைட் மிகப்பெரிய விலைக்கு விற்றுத்தீர்ந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஓவர்சீஸ் உரிமமும் பிரம்மாண்ட தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.