Thalapathy-63

Thalapathy 63 Issue : சிவா என்ற குறும்பட இயக்குனரால் தளபதி 63 படத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது ரசிகர்களை கொஞ்சம் அப்செட்ட்டாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி 63 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வெளிநாடுகளில் மட்டும் விஸ்வாசம் எத்தனை கோடி வசூல் தெரியுமா? – முழு விவரத்துடன் இதோ.!

நயன்தாரா நாயகியாக நடிக்க விவேக், யோகி பாபு, பரியேறும் பெருமாள் கதிர், மேயாத மான் இந்துஜா மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அட்லீ படங்கள் என்றாலே மற்ற படங்களின் சாயல் இருக்கும் என்பது போல் ஆகி விட்டது. இதுவரை அவர் இயக்கிய மூன்று படங்களுமே இந்த சர்ச்சையில் இருந்து தப்பவில்லை.

இந்நிலையில் தற்போது தளபதி 63 படத்திற்கும் இதே பிரச்னை ஏற்பட்டுள்ளது. குறும்பட இயக்குனர் சிவா என்பவர் பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து நான் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளேன்.

மீண்டும் ரி-என்ட்ரி கொடுத்த ரஜினி கமல் நாயகி அமலா – அதுவும் யார் படத்தில் பாருங்க.!

அதை கருவாக கொண்டு தான் அட்லீ இந்த படத்தை இயக்கி வருகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் எழுத்தாளர் சங்கம் மற்றும் நீதிமன்றத்திலும் இது பற்றி புகார் அளிக்க இருப்பதாக கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.