Thalapathy 63 Update

Thalapathy 63 Intro Song : தளபதி 63 படத்தில் இன்ட்ரோ பாடலை யார் பாட உள்ளார்கள் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.

தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி 63 அப்டேட் : விவேக்கை கோர்த்து விட்ட சந்தோஷ் நாராயணன் – டீவீட்டை நீங்களே பாருங்க.!

AGS நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விஜயின் அறிமுக பாடலை பிரபல பாடகரான பம்பா பாக்கியா தான் பாட இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இவர் சர்கார் படத்தில் சிமிட்டான்காரன் பாடலை பாடி இருந்தார். ஆனால் இந்த பாடல் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை.

எனவே தளபதி 63 பாடல் என்னவாகுமோ? என்ற அச்சம் விஜய் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த பாடல் வெளியானால் தான் பம்பா பாக்கியா கலக்கினாரா? சொதப்பினாரா? என்பது தெரிய வரும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.