Thalapathy 63 Gettup

Thalapathy 63 Gettup : தளபதி 63 படத்திற்காக கெட்டப்பில் தளபதி விஜய் இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய், இவருடைய ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த சர்கார் படத்தை தொடர்ந்து மெர்சல், தெறி ஆகிய படங்களை இயக்கி இருந்த அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்திற்காக கெட்டப்புடன் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகரான ரமேஷ் கண்ணா மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ தான் அது.

ரமேஷ் கண்ணாவின் மகன் சர்கார் படத்திலும் தளபதி விஜயுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.