Thalapathy 63 First Look : Thalapathy 63, Vijay, Atlee, Nayanthara, Vijay 63, Kollywood, Tamilcinema | Thalapathy 63 | Thalapathy 63 Trailer

Thalapathy 63 First Look :

மெர்சல் சர்க்கார் என தொடர்ந்து தன்னுடைய பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு வருவதால் இந்த முறை ஒரு மாற்றாக முன்கூட்டியே படத்தின் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

மோசமான ஆள் சூர்யா, சினிமாவில் அவர் டைம் முடிஞ்சு போச்சு – பிரபலத்தின் சர்ச்சை பேச்சு.!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது.

என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

அதேபோல் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மெர்சல் சர்க்கார் என தொடர்ந்து தன்னுடைய பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு வருவதால் இந்த முறை ஒரு மாற்றாக முன்கூட்டியே படத்தின் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதன்படி ஜூன் 18-ம் தேதி இப்படத்தின் டைட்டில் அல்லது first look poster வெளிவரும் என கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.