Thalapathy 63 First Look :

விஜய் 63 டீமால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், அதற்கான காரணம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா? இதனால் லைகா பின்வாங்கியதா? – ஷாக்கிங் அப்டேட்.!

இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். கதிர், இந்துஜா, யோகி பாபு, ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 22-ம் தேதி கொண்டாடப்பட உள்ள விஜய் பிறந்த நாள் சர்ப்ரைஸாக தான் வெளியாகும் என கூறப்படுகிறது.

அன்று வெளியாகும் போஸ்டரோடு சரி வேறு எந்த போஸ்டரையும் வெளியிட வேண்டாம் என்ற முடிவில் படக்குழு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால் உண்மையில் அப்படி இருக்க வாய்ப்பே இல்லை, நிச்சயம் இரண்டு மூன்று போஸ்டர்களாவது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கிறது? படக்குழுவின் திட்டம் தான் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.