Thalapathy 63 father Vijay | Thalapathy 63 | Vijay | Atlee | Nayanthara | AR.Rahman | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Thalapathy 63 father Vijay :

இதில் வயதான அப்பா விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார்களாம்.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

தளபதி 63 படத்தில் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா யோகி பாபு – அசத்தல் அப்டேட் இதோ!

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இப்படத்தில் விஜய் அப்பா மகனாக இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் மேலும் முதல் முறையாக வயதான அப்பா தோற்றத்தில் விஜய் இப்பபடத்தில் நடிப்பதாகவும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்,

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இதில் வயதான அப்பா விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார்களாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.