Thalapathy 63 Movie Update

Thalapathy 63 Movie Update : தளபதி 63 படத்தில் மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து நடிக்க உள்ளார்.

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தில் மேயாத மான், மெர்குரி, பில்லா பாண்டி ஆகிய படங்களில் நடித்து மிகவும் பிரபலமான இந்துஜா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தில் அவருக்கு என்ன ரோலாக இருக்கும் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரியில் தொடங்கி தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Indhuja

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here