Thalapathy-63

Thalapathy 63 Details : எனக்கே ஒரே போர் அடிச்சு போச்சு ஆனால் தளபதி 63 அப்படி இல்லை என தளபதி விஜய் தியேட்டர் ஓனர் ஒருவரிடம் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

கால்பந்தை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் கோச்சராக நடிக்க அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

மேலும் கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் இப்படத்தின் அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஜயே ஒரு சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ஆம், சென்னையில் உள்ள வெற்றி தியேட்டர் உரிமையாளர் சமீபத்தில் தளபதி விஜயை சந்தித்த போது இந்த படம் குறித்து கேட்டுள்ளார்.

அதற்கு தளபதி விஜய் மெர்சல், சர்கார் போன்ற படங்களில் மைக் புடிச்சு பேசி பேசி எனக்கே போர் அடிச்சு போச்சு. இந்த படம் கலர்புல்லா ஜாலியான படமாக உருவாகி வருகிறது என கூறியுள்ளார்.

Thalapathy-63

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.