
Thalapathy 63 Conditions : தளபதி ரசிகர்கள் அனைவரும் விஜயின் அடுத்த படம் பற்றி இந்த தப்பை மட்டும் செய்யவே கூடாது என ஸ்ட்ரிக்டாக அன்பு கட்டளை இட்டுள்ளார் பாடலாசிரியர் விவேக்.
அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் விஜய். தெறி, மெர்சல் படங்களை அடுத்து மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுத உள்ளார். இது குறித்து அறிவிப்புகள் நேற்று அதிகாரபூர்வமாக வெளியாகி இருந்தன.
இதனையடுத்து தளபதி ரசிகர் ஒருவர் பாடலாசிரியர் விவேக்கிடம் தலைவா வந்துட்டயா. அடுத்த ஒரு வருஷமும் எங்களோட தான் என ட்வீட் செய்து தளபதி 63 அப்டேட் கேட்டுள்ளார்.
இதற்கு பாடலாசிரியர் விவேக் உற்சாகமாக உள்ளது, நிச்சயம் நான் என்னுடைய பெஸ்ட்டை கொடுப்பேன். ஆனால் அப்டேட் மட்டும் கேட்க கூடாது என ட்வீட் செய்துள்ளார்.
இதோ பாடலாசிரியர் விவேக்கின் ட்வீட் :
Njoy Pandrom .. Update mattum keka koodadhu ???????????????????? https://t.co/2BPJ6Vohuz
— Vivek Lyricist (@Lyricist_Vivek) November 14, 2018